போட்டோ மேத் செயலி அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த செயலியின் செயல்பாடு பயனர்களை வியக்க வைக்கிறது.
எப்படி செயல்படுகிறது போட்டோ மேத் ?
போட்டோ மேத் செயலியில் ஒரு கணக்குக்கான விடையை பெற, ஒவ்வொரு எண்ணையும் உள்ளீடு செய்ய வேண்டிய அவசியமில்லை . மாறாக, புத்தகத்தில் அல்லது வினா தாள் போன்றவற்றில் அச்சிடப்பட்டுள்ள கணக்கை ஸ்மார்ட் போன் கேமரா மூலம், போட்டோ எடுத்தாலே போதும், விடை உடனடியாக தெளிவாக காட்டப்படும். அதுவும், போட்டோ எடுத்து முடித்த மறு நொடியே கணக்குக்கான விடை தெளிவாக காட்டப்பட்டுவிடும்.
இந்த செயலியில் விடை மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும். கணக்கை படிப்படியாக (step by step) தெரிந்துக் கொள்ள முடியாது. எனவே இந்த செயலியை கொண்டு, மாணவர்கள் தாங்கள் கணக்கை தீர்வு செய்தது சரிதானா என்பதை சோதித்துக் கொள்ளலாம்.
உதாரணமாக சமன்பாடுகளுக்கு (equations) தீர்வு காணும் போது, அந்த சமன்பாட்டின் விடை மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும். சமன்பாட்டின் படிப்படியான தீர்வை தெரிந்துக் கொள்ள முடியாது.
இந்த செயலி ஆண்டிராய்ட், விண்டோஸ், ஐபோன் என அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கிறது: PhotoMath
Post a Comment