ஒரு ஐபோனை சுற்றி, எறும்புகள் முன்னும்பின்னும் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்த ஐபோனுக்கு அழைப்பு வருகிறது. அப்போது, அதில் ஒலிக்கும் ரிங்டோன் மற்றும் அதிர்வால் அங்கிருந்த எறும்புகள் அந்த ஐபோனை சுற்றிச்சுற்றி வருகின்றன.
இந்த அதிசய நிகழ்வுகொண்ட வீடியோ, சமூக இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிறது.
வீடியோவை பதிவேற்றம் செய்த வைரல் வீடியோ லேப், இன்கம்மிங் அழைப்பால் ஏற்படும் மின் காந்த அலை காரணமாக எறும்புகள் வட்டமிடுவதாக தெரிவித்துள்ளது.
சில எறும்புகள் , அசாதாரண சூழலில் அதாவது அதிர்வு ஏற்படும் போது, அதிர்வலைகளை சுற்றி வருவதாகவும், அதனை எக்காரணமுமின்றி பின்பற்றி மற்ற எறும்புகளும் சுழன்று வருவதாகவும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சிலர் இதனை போலி வீடியாவாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
எதுவாகினும், எறும்புகள் வட்டமிடும் காட்சி இணையதளத்தில் பிரபலமாகி இருப்பதோடும், அதிர்வலைகளுக்கும், உயிரினங்களுக்கும் இடையேயான தொடர்புகுறித்த ஆய்வுக்கு உட்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment