இணையத்தினை ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட நோக்கங்களில் பயன்படுத்துகின்றனர். இதனை ஏராளமானோர் தவறான கண்கொண்டு பார்த்தாலும்  இணையமானது கற்றல் நடவடிக்கைகளுக்கும் சிறந்ததொரு களமாகவே அமைந்துள்ளது.

அந்தவகையில் வேகமாக தட்டச்சு செய்ய உங்களை பயிற்றுவிக்கும் முற்றிலும் இலவசமான ஒரு இணையதளம், மற்றும் சிறுவர்களின் அறிவு, ஆளுமை, சிந்தனை விருத்திக்காக பெரிதும் உதவும் பயனுள்ள தளங்கள். போன்ற எமது முன்னைய பதிவுகள் மூலம் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவும் இணைய தளங்கள் பலவற்றை நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை வீட்டிலிருந்தவாறே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுள்ளவர்களுக்கு உதவுகின்றது trilingualdictionary எனும் இணையதளம்.



  • இந்த தளத்தில் தமிழ் மொழியிலமைந்தஒரு சொல்லை சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கும் சிங்கள மொழியில் அமைந்த ஒரு சொல்லை ஆங்கிலம், தமிழ் மொழிகளுக்கும், ஆங்கிலத்தில் அமைந்த ஒரு சொல்லை தமிழ், சிங்கள மொழிகளுக்கும் என வெவ்வேறாக மொழி பெயர்துக்கொள்ள முடிவதுடன் அந்தந்த மொழிகளை தட்டச்சு செய்து கொள்வதற்கென குறிப்பிட்ட தளத்திலேயே Keyboad உம் தரப்பட்டுள்ளது.


ஆங்கிலம் கற்க இணையதளம்

  • இன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய முக்கியமான சொற்களும், வசனங்களும் பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளதுடன் எமது கற்றல் நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தும் பொருட்டு குறிப்பிட்ட சொற்களை அல்லது வசனங்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதற்கான ஒலி வடிவமும் தரப்பட்டுள்ளது.


தமிழ் ஆங்கிலம் கற்க இணையதளம்


இந்த தளத்தினை பயன்படுத்திக்கொள்ள எவ்வித கணக்குகளையும் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.


ஆசிரியர்கள், மாணவர்கள் என எந்த ஒரு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய இந்த தளத்திற்கு நீங்களும் பிரவேசிக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.





Post a Comment

 
Top