வாட்ஸ் அப்  வெப்-ல் இருந்த குறைபாடு காரணமாக செல்பேசியில் ஹாக்கிங் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதனை உடனடியாக வாட்ஸ் அப் சரி செய்துள்ளது.

வாட்ஸ் அப் அப்ளிகேஷன் மூலம், தற்போது தகவல் பரிமாற்றம் பரவலாகி வருகிறது.

இணைய வசதியுடன் கூடிய செல்பேசி வழி, தகவல்களை எளிதாக பரிமாறிக்கொள்ளும் இந்த வாட்ஸ் அப், கணினி மூலமும் பயன்படுத்தக்கூடிய வகையில் வசதிகள் மாற்றப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் வெப் என்று அழைக்கப்படும் இந்த வசதி மூலம், எளிதாக கணினி மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

இந்த வசதியை தற்போது, ஹாக்கர்கள் எளிதாக செல்பேசிகளை ஹாக் செய்ய பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்பு எண்களை அனுப்பும் வீகார்ட் (vcard) கோப்புகளை வாட்ஸ் அப்பில் அனுப்பி, ஹாக் செய்யப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்பு எண் கோப்பை செல்பேசியில் தரவிறக்கம் செய்தால், செல்பேசியில் உள்ள தகவல்களை திருட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய குறைபாட்டை உடனடியாக வாட்ஸ் அப் நிறுவன கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, தற்போது வாட்ஸ் அப் வெப் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top