பேஸ்புக்கில் வெரிபைட் கணக்குடைய, (verified) ஊடகவியலாளர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் ரசிகர்கள் அல்லது பாலோயர்ஸ்களுக்கு லைவ் வீடியோக்களை தங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துக் கொள்ளலாம் என பேஸ்புக் அறிவித்துள்ளது.

பேஸ்புக் பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யேக அம்சத்தை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ”பேஸ்புக் மென்ஷன்” மற்றும் ”பேஸ்புக் லைவ்” என்னும் இந்த அம்சங்களின் மூலம் பிரபலங்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகளை தங்களை பேஸ்புக்கில் பின்பற்றுபவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்ளலாம்.

பேஸ்புக் மென்ஷன் (Mentions) : 

பத்திரிக்கையாளர்கள் மற்றும் பிரபலங்களின் கருத்துக்களையும் கட்டுரைகளையும் மக்கள் ஆர்வமாக படிப்பது வழக்கம். அதே சமயம் சமூகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு போலி கணக்குகளில் இருந்து கமெண்டுகள் வருவதும் வழக்கம். எனவே பிரபலங்கள் தங்கள் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் பகிர ”பேஸ்புக் மென்ஷன்” என்னும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 பேஸ்புக் லைவ் (Live):

பேஸ்புக் மென்ஷன் அம்சத்தில், லைவ் என்னும் வீடியோ பகிரும் அம்சத்தின் மூலம் பிரபலங்கள் முக்கியமாக ஊடகவியலாளர்கள் (Journalists) ஒரு செய்தியை நேரடியாக பேஸ்புக்கில் தங்களை பின்பற்றுபவர்களுக்கு பகிர முடியும்.

ஏற்கனவே பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்த அம்சங்கள், தற்போது பேஸ்புக்கில் வெரிபைட் கணக்குடைய அனைத்து பிரபலங்களுக்கும்  வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top