மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸின் அடுத்த பதிப்பான ”Office 2016” செப்.22 ஆம் தேதி வெளியாக போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ”மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் 2016” பதிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

ஆஃபிஸ் 2016 சிறப்பம்சங்கள் : 

ஆஃபிஸ் 2016 பதிப்பில், ஒரே நேரத்தில் ஒன்றிற்கும் மேற்பட்டோர் ஆவணத்தில் திருத்தம் (co-edit documents) செய்ய முடியும். IT நிர்வாகிகள் மற்றும் வணிகத்தினர்களுக்கான சில புதிய அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும் ஒன் ட்ரைவுடன் (OneDrive) சின்க் (sync) செய்யும் வசதி என மேம்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை “மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் 2016” பதிப்பின் கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top