ஆப்பிள் நிறுவனத்தில் புதிய வகை டிவி, ஐபோன், ஐபேடு ஆகியவற்றை அதன் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டார்.

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வெளியிட்டார். புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஆப்பிள் டிவிக்கு பிரத்யேகமான செட் டாப் பாக்ஸ், டச் பேட் வசதி கொண்ட ரிமோட் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் டிவி, கேம், ஷாப்பிங் போன்று மொபைல் செயலிகளை டிவியில் பயன்படுத்தலாம். இதேபோல் 12.9 அங்குல திரை கொண்ட ஐபேட் புரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபேட்டை விட 1.8 மடங்கு வேகத்தில் செயல்படக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஐபேட் புரோவில் எம்.எஸ்.ஆபிஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் முதல் இந்த ஐபேட்கள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவகை ஐபோன்களுக்கு சிக்ஸ் எஸ் மற்றும் சிக்ஸ் எக்ஸ் பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. 3டி டச் வசதி கொண்ட ஐபோனில், ஐஓஎஸ் 9 வசதி இடம்பெற்றுள்ளது.

Post a Comment

 
Top