பேஸ்புக் நிறுவனம் 'Donate Now' என்னும் தொண்டு நிறுவனங்களுக்கான (NGOs) பிரத்யேக அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கின் இந்த அம்சம், சமூக நலனுக்காக இயங்கும் நிதி சாரா தொண்டு நிறுவனங்களையும், நன்கொடை அளிக்கும் ஆர்வத்தோடு இருக்கும் மக்களையும் இணைக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதி அளியுங்கள் (Donate Now) என்னும் அம்சம் நிதிசாரா நிறுவனங்களின் ஃபேஸ்புக் கணக்குகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் இந்த அம்சத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதால் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த அம்சம் ஐஸ் பக்கெட் சேலன்ஞ் என்ற பிரபல நிதி வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய அமைப்பின் ”The ALS Association” என்னும் ஃபேஸ்புக் கணக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

Post a Comment

 
Top