ஜிமெயில் பயனர்களுக்கு முக்கிய நிகழ்வுகள் மற்றும் பிற தகவல்களை நினைவுப்படுத்தும் வண்ணம் கூகுள் நாள்காட்டி (Calendar) மேம்படுத்தப்பட்டுள்ளது.இந்த அம்சம் இந்த வார இறுதிக்குள் வெளியாகியுள்ளது.

ஜிமெயில் பயனர்களுக்கு விமானம், ஹோட்டல், ரயில், பேருந்து போன்றவற்றின் டிக்கெட் முன்பதிவு விவரங்கள், நிகழ்ச்சி மற்றும் நிகழ்வு அழைப்பிதழ்கள் மின்னஞ்சல்களில் வருவது வழக்கம். பயனர்கள் அனைத்து நிகழ்வுகளையும் நினைவு வைத்துக் கொள்வது கடினம். எனவே, மெயிலில் வரும் நிகழ்வுகள் மற்றும் முன்பதிவு தகவல்களை சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் கூகுள் காலண்டரில் தோன்றும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள், இந்த அம்சம் அறிமுகமாக உள்ளது.

உதரணமாக பயனர்கள் பேருந்து அல்லது ரயில் முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் பயணம் செய்யவிருக்கும் நாளையும், டிக்கட் குறித்த அப்டேட்களும், கூகுள் நாள்காட்டியில் அந்தந்த தேதிகளில் செய்தியாக தோன்றும்.  

இந்த கூகுள் காலண்டர் அம்சம், கூகுள் செயலி பயம்படுத்தும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Post a Comment

 
Top