இன்று சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாதவர்கள் யார் என்பதை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு சமூக வலைதளங்களின் ஆதிக்கம் இணைய உலகில் பரவிக்கிடக்கிறது. இந்த அளவிற்கு வளர்ச்சியடைய முக்கிய காரணமாக விளங்குவது மொபைல் போன் என்கின்ற ஆறாவது விரல் தான். இந்த ஆறாவது விரல் மூலம் தான் பெரும்பாலான தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது. இதற்க்கு பெரும் உதவிபுரிவது சமூக வலைத்தளங்கள் மற்றும் மொபைல் போன் ஆப். எனவே நாம் சமூக வலைதளங்களில் பொருத்தமான மற்றும் கச்சிதமான புகைப்படங்களை பயன்படுத்துவதால் அதிகமான பயனர்களை நாம் பெற இயலும்.
சமூக வலைதளத்திற்கு பொருத்தமான இமேஜ் மற்றும் போடோக்களை பயன்படுத்த பல்வேறு இணைய சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால், அவைகள் உங்கள் கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தின் செயல்திறனை குறைக்கும். நீங்கள் எளிதாக மற்றும் விரைவாக சமூக வலைதளத்திற்கு கணக்கசிதமான புகைப்படங்களை பாப்லோ(Pablo.Buffer) இவற்றில் உருவாக்கலாம். அதற்க்கு உங்களுக்கு மிக குறைந்த நேரமான 30 வினாடிகள் போதும். வாருங்கள் எப்படி என்று பார்க்கலாம்.
வழி 1 : முதலில் நீங்கள் https://buffer.com/pablo என்ற இணைய தளத்திற்கு செல்லவேண்டும். அங்கு காணப்படும் முகப்பு பக்கத்தின் முதல் டெக்ஸ் பாக்ஸ்-ல் நீங்கள் விரும்பிய தகவல்களை டைப் செய்யுங்கள். அது உங்கள் இமேஜ்-ல் பெரிய எழுத்துக்களில் தெரியும். அதன் பிறகு அதற்க்கு கிழே உள்ள இரண்டாவது டெக்ஸ் பாக்ஸ்-ல் டைப் செய்தால் சிறிய எழுத்துக்களில் தெரியும். எனவே உங்களுக்கு தேவையான தகவல்களை புகைப்படங்களில் காண்பிக்கலாம்.
வழி 2 : புகைப்படங்களின் எழுத்துக்களை பெரிய மற்றும் சிறிதாக மாற்றலாம். அதற்க்கு ஹெட் லைன் ஆப்சன்ஸ் à என்பதன் கீழ் உள்ள ஆப்சன்களை பயன்படுத்துங்கள்.
வழி 3 : பேக்ரவுண்டு ஆப்ஷன்ஸ்: 1. Normal 2. Blurred 3. Black & White இவற்றில் உங்களுக்கு தகுந்தவற்றை தேர்தெடுக்கவும். கூடவே அப்லோட் போட்டோ: என்ற இடத்தில் விரும்பிய புகைப்படங்களை இணைத்துகொள்ளுங்கள். இப்பொழுது, உங்கள் சமூக வலைதள புகைப்படம் தயாராகிவிட்டது. அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் அல்லது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் நேரிடையாக பதிவேற்றம் செய்யலாம்.
குறிப்பு: கிழே உள்ள மாதிரியை பார்க்கவும்.
உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்.
Post a Comment