சியோமி, ஆப்பிள், மைக்ரோசாப்ட் வரிசையில், தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் சொந்தமாக இயங்குதளத்தை (OS) வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தற்போது அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், லப்டொப் மற்றும் டிவி ஆகிய கருவிகளில் மட்டும் இயங்கும் வகையில் பிரத்யேகமாக இயங்குதளத்தை உருவாக்க போவதாக அண்மையில் தகவல் வெளியானதை அடுத்து மைக்ரோமேக்ஸ் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயங்குதளம் அண்ட்ராய்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
புதிய இயங்குதளத்துடன் கூடிய முதல் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெங்களூரில் உள்ள மைக்ரோமேக்ஸ் கிளை நிறுவனத்தின் மென்பொருள் குழு, இயங்குதள உருவாக்கத்தில் பணியாற்றி வருகிறார்கள். அதுமட்டுமின்றி, இந்த புதிய இயங்குதளத்தை வடிவமைக்கும் பணியில் பீஜிங்கில் உள்ள நோக்கியா ஆராய்ச்சி பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பேர் கொண்ட குழு ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment