ஐபோன் பயனர்கள் இனி கணினியிலும் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்
ஐபோன் பயனர்கள் கணினியில் இருந்து வாட்ஸ் அப் இயக்குவதற்கான வெப்-அப்ளிகேஷன் வெளியிடப்பட்டுள்ளது. இனி ஐபோன் பயனர்கள் கணினியில், வாட்ஸ் அப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட், விண்டோஸ், பிளாக்பெர்ரி பயனர்களுக்கு ஏற்கனவே வாட்ஸ் அப் வெப் (Whatsapp Web) வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆப்பிள் iOS போன்களுக்கும் வாட்ஸ் அப் வெப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐ-போன் பயனர்களும் இனி வாட்ஸ் அப்பை கணினியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இனி விண்டோஸ், ஐபோன், ஆண்ட்ராய்ட் என அனைத்து ஸ்மார்ட் போன் பயனர்களும் பிரவுசர் திறந்து https://web.whatsapp.com/ என்ற முகவரிக்கு சென்றால், QR கோடு தோன்றும். பின்பு போனில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை திறந்து, Whatsapp Web என்னும் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும், உடனே QR கோடு ஸ்கேனர் மூலம், க்ரோம் பிரவுஸரில் காட்டப்பட்டிருக்கும் QR கோடை ஸ்கேன் செய்து வாட்ஸ் அப் வெப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் தற்போது பல புதிய அம்சங்களுடன், வாட்ஸ் அப் வெப் மேம்படுத்தப்பட்டுள்ளது. மொபைலில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது போல் கணினியிலும் பல அம்சங்களுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Post a Comment