நமது ஸ்மார்ட்போனை முப்பரிமாண (3D) ஸ்கேனராக மாற்றும் புதிய அப்ளிகேசனை மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், டிஜிட்டல் உலகின் மற்றொரு புரட்சியாக மொபைல் ஃபுயூசன் (Mobile Fusion) எனும் அப்ளிகேசன் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த அப்ளிகேசனானது நாம் உபயோகிக்கும் ஸ்மார்ட்போனை முப்பரிமாண ஸ்கேனர் கருவியாக செயல்பட வைக்கின்றது.

முப்பரிமாணத்தில் ஸ்கேன் செய்யப்படும் படத்தைக் கொண்டு முப்பரிமாண படங்களை நாம் ப்ரிண்ட் செய்து கொள்ளலாம். இதற்காக இண்டெர்நெட் இணைப்பு தேவையில்லை, பிரத்யேகமான புதிய மொபைல் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை என்பது கூடுதல் சிறப்பு. நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் மொபைல் கேமராவை கொண்டே முப்பரிமாண ஸ்கேன் செய்யலாம்.

மொபைல் ஃபுயூசன் எனும் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவியவுடன், எந்த பொருளை ஸ்கேன் செய்ய வேண்டுமோ அதனை சுற்றிலும் சாதரனமாக வீடியோ எடுப்பது போல எடுக்கும் போது, ஸ்டீரியோ பொருத்துதல் எனும் முறையில் ஒவ்வொரு ஃபிரேம்களையும் அடர்த்தியான தடங்களாக சேர்த்து முப்பரிமாண ஸ்கேன் செய்கிறது. இதன் மூலம் முப்பரிமாண படங்களை ஸ்கேன் செய்யும் வசதி நமது கையடக்க ஸ்மார்ட் மொபைல் மூலமாக சில நொடிகளில் கிடைத்துவிடுகிறது.

தற்சமயம் மைக்ரோசாப்டின் ஆய்வில் இருக்கும் இந்த அப்ளிகேசன் விரைவில் பொதுமக்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி கிடைப்பதன் மூலம் யாராலும் முப்பரிமாண உருப்படிவம் (3D Model) உருவாக்கிட முடியும். இது டிஜிட்டல் யுகத்தின் ஒரு மைல்கல்லாக அமையும்.

இதனால் இதுவரையிலும் 2D படங்கள் எடுத்துவந்தவர்களால் இனி முப்பரிமாணத்தில் படம் எடுக்கவும் சமூக வலைத்தளங்களில் அதனை பதிவேற்றம் செய்யவும், 3D பிரிண்டர் உபயோகித்து முப்பரிமாண படங்களை ப்ரிண்ட் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top