ஃபேஸ்புக் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், ஒரே நாளில் பேஸ்புக் பயன்படுத்துயுள்ளதாகவும்,உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் ஏழு பேரில் ஒருவர், கடந்த திங்களன்று ஃபேஸ்புக் பயன்படுத்தியுள்ளதாகவும் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக், 2004 ஆம் ஆண்டு ஹார்வர்ட் மாணவரான மார்க் ஜுக்கர்பெர்கால் நிறுவப்பட்டது. அக்டோபர் 2012 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை பில்லியனை தொட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியாகி மூன்று வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் ஏழு பேரில் ஒருவர் ஃபேஸ்புக் பயன்படுத்தியுள்ளது ஃபேஸ்புக்கின் ”மைல்கல்” என ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment