புதிதாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐ ஃபோன்களுக்கு உலகின் பிறபகுதிகளை விட சீனாவிலேயே அதிக ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் 6s மற்றும் 6s ப்ளஸ் மாடல் ஐ ஃபோன்களைக் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. ஒரு வாரத்தில் ஒரு கோடிக்கும் மேல் இந்த ஃபோன்களுக்கான ஆர்டர்கள் குவிந்துள்ள நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தினமும் லட்சக்கணக்கானோர் ஆர்டர்களை அளித்து வருகின்றனர்.

இவர்களில் சீனர்களே அதிகம் என ஆப்பிள் நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டைக்காட்டிலும், இந்த ஆண்டு ஐ ஃபோன்களின் விற்பனை 85 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Post a Comment

 
Top