சமீபத்திய அறிமுகமான ஐபோன் 6s,6s Plus போன்கள் மூலம் தனது சாதனையை தானே ஆப்பிள் நிறுவனம் முறியடித்துள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 6s மற்றும் ஐபோன் 6s Plus,இதுவரை ஒரு கோடி போன்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐபோன் 6s மற்றும் ஐபோன் 6s Plus  அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 24 மணிநேரத்திலேயே, 45 லட்சம் பேர் போன்களை ஆர்டர் செய்து விட்டதாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன்களுக்கு, முதல்நாளில், 40 லட்சம் போன்களே ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. இதன்மூலம், ஆப்பிள் நிறுவனம், தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

Post a Comment

 
Top