கூகிள் கடந்த 17 ஆண்டுகளாக பல பரிணாம மாற்றங்களை பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.

அப்படி என்ன மாற்றம் ? 

கூகுள் லோகோவில் உள்ள சிறிய நீல நிற ”G”யை நீக்கிவிட்டு, நான்கு வண்ணங்களில் கலர்புல்லான G-யை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்ணமையமான மாற்றம் இன்றைய கூகுள் மட்டுமல்ல, எதிர்கால கூகுளையும் குறிப்பிடுகிறது என கூறியுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் லோகோவில் மட்டும் மாற்றம் கொண்டு வரப்படவில்லை, வேறு சில மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்பு டெஸ்க்டாப் கணினி மூலம் மட்டுமே கூகுளைப் பயன்படுத்தமுடியும். ஆனால் இன்றிலிருந்து பல ஆப் மற்றும் நவீன சாதனங்களையும் பயன்படுத்த முடியும். மேலும் இன்று வெளியாகியுள்ள புதிய லோகோ, மிகச் சிறிய ஸ்க்ரீனில் கூட கூகுள் இயங்கும் என்பதைக் பிரதிபலிக்கிறது. கூகுளில் குரல் மூலம் தேடும் அம்சமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூகுளின் மைக்கும் (Mic) வண்ணமையமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

                         

Post a Comment

 
Top