மைக்ரோ பிளாக்கிங் தளமான டிவிட்டர், பாலின இடைவெளியை (gender gap) நீக்கி, ஆண் பெண் சமத்துவத்தை ஆதரிக்கும் வகையில், அடுத்த ஆண்டு நிறுவனத்தின் பல்வேறு மட்டங்களில் அதிக பெண் ஊழியர்களை பணி அமர்த்த போவதாக டிவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதை குறித்து டிவிட்டர் வெளியிட்ட செய்தியில்,” டிவிட்டர் நிறுவனத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 35% அதிகரிக்கப்பட உள்ளது. தற்போது டிவிட்டர் நிறுவனத்தில் 4,100 ஊழியர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு இந்த ஒட்டு மொத்த எண்ணிக்கையில், தொழில்நுட்ப பிரிவில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 16% அதிகரிக்கப்பட உள்ளது. மேலும் நிர்வாக பொருப்பில் பெண்களின் எண்ணிக்கையை 25% உயர்த்தப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்ட்ரஸ்ட்(Pinterest) என்னும் சமூக வலைத்தளம், அந்நிறுவனத்துள்ள பெண் பொறியியல் ஊழியர்கள் எண்ணிக்கையை தற்போதைய 21 சதவிகிதத்தில் இருந்து 30 சதவீதம் அளவிற்கு உயர்த்த போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment