மெதுவான இன்டர்நெட் கனெக்சன் கொண்டவர்கள், செல்போனில் குறைவான மெமரி உள்ளவர்கள், 2 ஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இந்த புதிய ஆப் மூலம் பேஸ்புக்கை எளிமையாகவும், துரிதமாகவும் உபயோகிக்கலாம்.இந்த அப்ளிகேஷன் 1 எம்பிக்கும் குறைவான இடத்தை தான் எடுக்கும்.
மெதுவான இண்டர்நெட் கனெக்சன் இருந்தாலும் வேலை செய்யும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட மென்பொருளினை மிக குறைந்த நேரத்தில் துவக்கிக்கொள்ள முடிவதுடன் இணைய இணைப்பினை முறையாக பெற முடியாத இடங்களிலும் கூட News Feed, status updates, photos, notifications போன்றவைகளை இலகுவாக கையாளலாம்.
இந்த அப்ளிகேஷன் முதலில் ஆசியாவில் சில நாடுகளில் வெளிவந்த பின்னர் அமெரிக்கா , ஆப்ரிக்கா,ஐரோப்பா ஆகிய நாடுகளில் வெளிவரும்.
Sources: (Facebook)http://newsroom.fb.com/news/2015/06/announcing-facebook-lite/
Post a Comment