ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களில் எவ்வளவுதான் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமானாலும், பாட்டரிகளின் செயல்திறன் விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாகதான் உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் அதில் பயன்படுத்தப்படும் பலவித அப்ளிகேஷன்கள் தான். ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள அதிகப்படியான ஆப்ஸ்கள் பாட்டரியை அதிகம் எடுத்துக்கொள்வதால் பாட்டரி விரைவில் தீர்ந்து விடுகிறது. இதனால் தினம் இரண்டிற்கும் மேற்பட்ட தடவை பாட்டரிகளை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது.
இந்த பாட்டாரி பிரச்சனையை தீர்க்க என்னதான் வழி என ஆராய்ந்து பார்த்தால், கூகிள் பிளேயில் தினம் தினம் வந்துக்கொண்டிருக்கும் பேட்டரியின் செயல்திறனை அதிகரிக்கும் அப்ளிகேஷன்களில் அதிக பிரபலமான ஆப்பிளிகேசன் ஒன்று இதற்கு தீர்வாக கிடைத்துள்ளது. அதன் பெயர் Battery Doctor (Battery Saver). இனி இந்த அப்ளிகேஷன் குறித்து விரவாக கீழே பார்க்கலாம்.
1.Battery Doctor (Battery Saver)

இந்த பாட்டரி டாக்டர் ஆப்பிளிகேசனை ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
பாட்டரி சேமிக்க மேலும் சில ஆப்ஸ்:-
2. DU Battery Saver & Widgets
இது Battery Doctor அளவுக்கு பிரபலமாகவில்லை என்றாலும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை உலகில் மில்லியன் கணக்கில் பயன்படுத்துக்கிறார்கள். இதுவும் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
தரவிறக்க:- DU Battery Saver & Widgets
3. Easy Battery Saver
இதுவும் Battery Doctor அளவுக்கு பிரபலமாகவில்லை என்றாலும் உலகெங்கும் 8 லக்சம் பேருக்கு மேல் பயன்படுத்துக்கிறார்கள். இது ஆப்ஸ் கொள்ளளவும் ரொம்ப கம்மி. தரவரிசையில் 4.6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதுவும் ஆண்ட்ராய்ட் 2.3 ஜிங்கர் பிரெட் முதல் ஆண்ட்ராய்ட் 4.4.3 கிட்காட் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
தரவிறக்க:- Easy Battery Saver
Post a Comment