அப்பிள் நிறுவனமானது அண்மையில் iPhone 6S மற்றும் 6S Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளினை அறிமுகம் செய்திருந்தமை அறிந்ததே.
அறிமுகமாகி குறுகிய காலத்தில் கைப்பேசி சந்தையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள இக் கைப்பேசிகளுக்கான துணைச் சாதனங்களும் தற்போது அறிமுகமாகத் தொடங்கியுள்ளன.
இதன் ஒரு அங்கமாக வயர்லெஸ் முறை மூலம் மின்கலத்தை சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இச்சாதனமானது உட் பகுதியில் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய Lithium-ion Polymer மின்கலத்தினைக் கொண்டுள்ளது.
இதன் உதவியுடன் iPhone 6S மற்றும் 6S Plus கைப்பேசிகளினை 100 சதவீதம் வரையில் சார்ஜ் செய்ய முடியும்.

Post a Comment

 
Top