பேஸ்புக் கணக்கின் நண்பர் பட்டியலிலிருந்து அலுவலக நண்பர் ஒருவரை நீக்கம் செய்வது, பணியிடத்தில் கொடுமைப்படுத்துவதற்கு இணையானது என்று ஆஸ்திரேலிய தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிலுள்ள டாஸ்மானியா தீவில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள் பேர்ட் மற்றும் ராபர்ட்ஸ், இவர்களிடையே நடந்த கருத்து மோதலினால், பேர்ட், ராபர்ட்ஸ்சை தன் பேஸ்புக் கணக்கின் நண்பர் பட்டியலிலிருந்து ( Unfriend) நீக்கம் செய்தார். 

இது குறித்து விசாரித்த ஆஸ்திரேலிய தீர்ப்பாயம், ”பேர்டின் இந்த செயலினால், ராபர்ட்ஸ் மிகவும் மன வேதனை அடைந்ததாகவும், மேலும் பேர்டின் இந்த பொய்யான நடத்தை பணியிடத்தில் கொடுமைப்படுத்துவதற்கு இணையானது எனவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பேர்ட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது..

இனி, அலுவலகங்களில் வேலை பார்ப்போர் நண்பர் பட்டியலில் இருந்து தங்கள் சக அலுவலக ஊழியரை நீக்குவதற்கு முன் சற்று யோசிக்கவே வேண்டும்..  



Post a Comment

 
Top