ஜி-மெயில் ஆண்ட்ராய்ட் ஆப்பில் அணைத்து பயனாளர்களும் எதிர்பார்த்த, தேவையற்ற ஈமெயிலை நிறுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகிள்.

புதிதாக மேம்படுத்தப்பட்ட ஜி மெயில் ஆண்ட்ராய்டு ஆப்பில் இந்தவசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி ஏற்கனவே இணையதள வாடிக்கையாளர்களுக்கு ஜி மெயில் வழங்கியிருந்தது.

இந்தவசதியை பயன்படுத்தி ஒருவரின் ஈமெயில்-யை நிறுத்தும்போது(Block) அவர் அனுப்பும் அணைத்து தகவல்களும்  நேரடியாக ஸ்பாம் (Spam) பகுதிக்கு மாற்றிவிடப்படும். இதன் மூலம் தேவையற்ற மெயில்-கலை தடுத்து நிறுத்தலாம் . தவறுதலாக நிறுத்தப்பட்ட ஈமெயில் முகவரியை விடுவிக்கவும் ஜிமெயில் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இவ்வாறு தடுத்து நிறுத்தப்படும் போது , மெயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அனுப்பியவர்களுக்கு தெரியப்படுத்தபடாது என்றும் கூகிள் தெரிவித்துள்ளது.

ஜிமெயில் இணையதள வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இருக்கும் இந்த வசதி  ஜி-மெயில் ஆண்ட்ராய்டு ஆப்பில் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Post a Comment

 
Top