செய்திகளை வழங்குவதில் முன்னனியில் உள்ள டிவிட்டருக்கு போட்டியாக ஃபேஸ்புக் தற்போது ”சிக்னல்” (Signal) என்னும் பத்திரிகையாளர்களுக்கு உதவும் சிறப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களுக்கான சிக்னல் என்னும் இந்த கருவி (Tool), ஃபேஸ்புக் மட்டுமின்றி இன்ஸ்டாகிராமிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் செய்தியாளர்கள் தற்போதைய நடப்புகள், நிகழ்வுகள், முக்கியமான செய்திகள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள முடியும்.
செய்தி நிறுவனங்களில் பணிப்புரியும் பத்திரிக்கையாளர்கள் மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். மற்ற துறையினர் பயன்படுத்த முடியாது. தற்போது எந்த செய்தி டிரெண்டில் உள்ளது, முக்கிய நிகழ்வுகளின் லைவ் வீடியோக்கள், செய்திகளின் மூலம் (Source) ஆகியவற்றை செய்தியாளர்கள் எளிதில் பெற முடியும்.
செய்தியாளர்கள் https://goo.gl/vRxAHV இந்த லின்கை (link) பயன்படுத்தி ”சிக்னல்” என்னும் இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சிக்னல் அம்சத்தை பயனர்கள் பயன்படுத்துவதற்கு முன்னர் அவர்கள் செய்தி நிறுவனத்தில் பணிப்புரிபவரா என்பதை ஃபேஸ்புக் சரிப்பார்த்துக் கொள்ளும். மேலும் அலுவலக மின்னஞ்சல் முகவரியை வைத்து மட்டுமே இதில் பதிவு செய்ய முடியும்.
சமீபத்தில் பேஜஸ் (Pages), இன்ஸ்டண்ட் ஆர்ட்டிகள்ஸ் (Instant Articles), மென்ஷன் (Mentions), கேள்வி பதில் (Q & A), லைவ் (Live) வீடியோ உள்ளிட்ட பல சிறப்பு கருவிகளை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தாலும், இந்த அம்சங்கள் அனைத்து. மக்களை சென்று சேரவில்லை என்று தெரிவித்துள்ளன முன்னனி ஆய்வு நிறுவனங்கள்.
டிவிட்டர் தளம் அனைத்து பயனர்களுக்கும் செய்திகளை வழங்கி வரும் நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் செய்தி நிறுவனங்களில் பணிப்புரியும் பயனர்களுக்கு மட்டும் இந்த கருவியை வழங்குவது ஏன் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

Post a Comment