ஜி.மெயிலூடாக பணம் மாற்றீடு செய்யக் கூடிய புதிய வசதியினை கூகிள் நிறுவனம் இங்கிலாந்து வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தவுள்ளது.
கூகுள் வலற்றினை பயன்படுத்தி இந்த புதிய சேவையினை பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதி ஜக்கிய இராட்சியத்திலேயே முதன் முதலில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் இந்த புதிய சேவையானது முற்றுமுழுதாக கூகுள் வலற்றின் சேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சலில் உள்ள £ என்ற குறியிட்டினை தெரிவு செய்வதன் மூலம் பணத்தினை அனுப்ப முடியும். இதன்போது பணம் பெறுனர் ஜிமெயில் முகவரியை கொண்டிருக்க தேவையில்லை. இவ்வாறு வழங்கப்படும் பணம் எதிர்கால தேவைக்காக கூகுள் வலற்றில் சேமிக்கப்படும். அல்லது வழங்கப்பட்ட பெறுநரின் வங்கி கணக்கிற்று மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிமெயிலின் இத்தகைய புதிய வசதியானது 18வயதிற்கு மேற்பட்டவர்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
Post a Comment